தனியே நீ முணுமுணுக்கும்

அன்று,தாயின் மடி எனக்காக காத்திருந்தது !தலை சாய்த்து விழி மூடி தூங்க எனக்கு நேரமில்லை !ஆனால் இன்று மடியில் தலை சாய்த்து விழி மூடி தூங்க நினைக்கிறேன் !என் தாய் என் அருகில் இல்லை

வியாழன், 23 செப்டம்பர், 2010

வாழ்க்கை..

சிவப்பு மனிதனுக்கும் நிழல் கருப்பு தான்
கருப்பு மனிதனுக்கும் இறத்தம் சிவப்பு தான்
வண்ணங்களில் இல்லை வாழ்க்கை,
மனித எண்ணங்களில் தான் வாழ்க்கை..

நட்பு

நட்பு
துன்பம் நேர்கையில் தோள் கொடுப்பது நட்பு !
உடன் பிறப்பாய் எண்ணி அன்பு காட்டுவது நட்பு !
தடை விதிப்போரை தட்டி கழிப்பது நட்பு !
மனஸ்தாபம் ஏற்பட்டாலும் மனம் விட்டு பேசுவது நட்பு !
நட்பை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது
நல்ல உள்ளங்களை தவிர ............
உங்கள் அன்பு .. A.S.ராஜ்குமார்

பிரிவு

ஈடு கொடுக்க முடியாத சொந்தம் ------- தாய்
முன்னேற்றத்தின் வழிக்காட்டி -------- தந்தை
மீள முடியாத பந்தம் -------- பாசம்
என்றும் நிலைக்காதது ------- கற்பனை
விடிந்தால் முடிந்து போகக் கூடிய வாழ்க்கை -------- கனவு
வெற்றி பெற முதல் வைப்பது ------------- நம்பிக்கை
வாழ்க்கையில் இருக்கக் கூடாதது --------------- எதிபார்ப்பு
புரிந்து கொண்டவர்களுக்கே -------------- வாழ்க்கை
கண்ணீருடன் முடிவடைவது --------------------- கஷ்டங்கள்
அழியாத சொந்தம் ---------------------------நட்பு
உலகத்தில் அனைவருக்கும் கிடைக்காதது ---------நிம்மதி
ஆசைப்படுதலின் முடிவு --------------------- அறிவு
வறுமையை விட கொடிய நோய் ---------------பிரிவு

அய்யோ.......தீ..........

அயோத்தி..........அய்யோ.....தீ....

ஆண்டவனுக்கு ஆலயம் கட்ட அரிவாளை நீட்டாதே!
மனித இனம் தழைக்க வா அறிவாலையை தொடங்குவோம்...
மதம் பிடிக்காத மனிதர்கள் இணைந்து
அறிவு ஆலையை தொடங்குவோம்.....

பயமாக இருக்கிறது

என்னவளே

உன் கொலுசொலி கேட்டால்

பயமாக இருக்கிறது

என் மனசின் ஒலி கேட்காமல்

போய் விடுமோ என்று

நீ இருந்தால்

என் பார்வைக்கு அர்த்தங்கள் கற்று கொடுத்தவள் நீ

என் பார்வையாக நீ இருந்தால்

எனக்கு கண்கள் தேவை இல்லை

என் உயிராக நீ இருந்தால் எனக்கு

உயிரும் தேவை இல்லை

பெண்ணாகி விட்டதாலே தோழியாக மட்டும்

இருக்கிறாய்

என் கவிதைக்கு தாயாகி என்னை வதைக்கிறாய் ஏனடி

தேடுகிறேன் ...

தேடுகிறேன் ..
தோல்வி இல்லாமல் வெற்றி பெற்றவரை !

தேடுகிறேன் ..
குறையே இல்லாத மனிதரை !

தேடுகிறேன் ..
முட்களே இல்லாத ரோஜாவை !

தேடுகிறேன் ..
நரையே இல்லாத முதியவரை !

தேடுகிறேன் ..
பிழையே இல்லாத புத்தகத்தை !

தேடுகிறேன் ..
நட்சத்திரங்களே இல்லாத வானத்தை !

தேடுகிறேன் ..
அலைகளே இல்லாத கடலை !

கடைசியில், ஒன்று மட்டும் புரிந்தது :

இருப்பதை விட்டுவிட்டு இல்லாததை
ஏன் தேட வேண்டும் ?

கவிதை பூக்கள்

நீ பேசாத தினங்களிலோ ....
என் உடைந்து போன உள்ளம் .....
உதிர்ந்த பூக்களாகும்.....!
நீ பேசிய தினங்களிலோ....
என் உள்ளம் உனக்கான....
கவிதை பூக்களாய் மலரும்...!

மௌனமே வாழ்க்கையாய

தினம்தோறும் இருவரும்
திரும்பிப் பார்த்தும்
அறிமுகம் இல்லாதவராய்
வழி செல்லும் பயணம்

இதயம் மேடையிட்ட
காதல் கச்சேரிக்கு
சரிகமபதநி கூட
சரியாக உச்சரிக்கபடவில்லை

பூக்காத மொட்டுக்கு
கூந்தல் ஏற ஆசை
போகாத ஊருக்கு
வழித் தேடி தவிப்பு

சந்து முடுக்குகளில்
சங்கமித்த நம் காதல்
சமுத்திரமாய் விரிவதற்குள்
வற்றிய நீர் குளமாய்

அழகான குழந்தைக்கு
ஊனமாய் ஒரு கால்
ரசம் சொட்டும் கவியில்
நெருடலாய் சில பிழைகள்

முற்று பெறாத
முதல் வார்த்தைக்கு
அர்த்தம் மட்டும்
எப்படி கிடைக்கும்

ஓடாத கடிகாரத்தில்
மணிபார்த்த கதையாய்
உலா வந்த நம் காதல்
கல்லடிபட்ட கண்ணாடியாய்

விரிசலுக்குள் மறைந்த
என் காதல் பிம்பத்தை
விழிப் போட்டு தேடுகிறேன்
எட்டிய தூரத்தில் நீ இருந்தும்

காதல் செய்யுங்கள்

உயிர் இல்லாத மலரைக் கூட நேசிக்கிறோம்
ஆனால் நமக்காக உயிரையே கொடுப்பவர்களை
மட்டும் நேசிக்க யோசிக்கிறோம்
ஆகையால் ஒருவரை ஒருவர் காதல் செய்யுங்கள்

சோ லவ் ஈச் அதர்

என்ன மந்திரம் செய்தாய்

உன்னைவிட
அழகான பெண்கள்
எல்லாம் என்னைக்
கடந்து போகிறார்கள்...
உன்னைவிட
அக்கறையோடும் சிலர்
என்னை
நேசிக்கிறார்கள்...
இருந்தும்
உன்னை மட்டுமே
நினைக்கும்படியாய்
என்ன
செய்தாய் என்னை?

பிரிந்தோமா...?

பிரிதல் எப்படிச்
சாத்தியம்?
உன்னில் இன்னும் நான் இருக்கையில்...

உதடுகள் மாறுகின்ற
உண்மையை
கண்ணாடியில் முகம் பார்த்து
கண்களிடம் கேள்.

கோபத்தில் நீ எறிந்த
வார்த்தைகளைக் கனல்துளிகளைக்
குவித்து வைத்திருக்கிறேன்
குளிர் காய்வதற்கு

நீ தந்த காயங்களை கூட
ஆறுவதற்கு நான்
அனுமதிப்பதில்லை
அந்த வலிகள் உன்னை
நினைவூட்ட வேண்டுமென்று

உன் நினைவுகளை
எரித்த சாம்பலிலும்
பீனிக்ஸ் பறவையாய்
நீயேதான் எழுகிறாய்

பிறகெப்படி நாம்
பிரிந்தோம் என்கிறாய்...?

இதயம்

உன்னை என் இதயம் என்று சொல்ல மாட்டேன்
ஏன் என்றால்
நீ துடித்து நான் உயிர் வாழ விரும்ப வில்லை